மலையகப் பகுதிகளுக்கு செல்லும் சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மலையகப்பகுதிகளுக்கு செல்லும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அதன்படி, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதி, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி மற்றும் பதுளை – கொழும்பு பிரதான வீதிகளில் அதிக பனிமூட்டம் நிலவுகிறது.

அத்துடன் குறித்த வீதிகளில் மண்சரிவு நிலவும் அபாயம் காணப்படுவதன் காரணமாக சாரதிகள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles