சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் இயக்குனர் ரோஜியருக்கும் மலையக மக்கள் முன்னணியின் இளைஞரணி தலைவருமான லெட்சுமனார் சஞ்சய்க்கும் இடையிலான சந்திப்பு ஜெனிவாவில் உள்ள தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.
மலையக மக்கள் மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஸ்ணன் வேண்டுகோளிற்கு இணங்க ஜெனிவா பயணமான மலையக மக்கள் இளைஞரணி தலைவர் லேட்சுமனார் சஞ்சய் சரவதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் இயக்குனர் ரோஜிய்ரை சந்தித்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது நாட்டின் அரசியல் நிலை குறித்தும் மலையகத்தின் இளைஞர்களின் அரசியல் பிரவேசம் சம்பந்தமாகவும், தற்காலத்தின் இலங்கையின் தேர்தல் நிலைக்குறித்தும் ,சமூக ஊடகங்களின் அடக்குமுறை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதோடு இது தொடர்பில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டதோடு இலங்கை நாட்டின் ஜனாதியுடனான சந்திப்பில் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதாகவும் சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் இயக்குனர் ரோஜியர் தெரிவித்துள்ளார். நீலமேகம் பிரசாந்த்










