மலையகம் பெருமை கொண்ட தருணம்….!

இந்தியாவின் zee tamil இல் ஒளிபரப்பாகும் saregamapa little champs 2023 போட்டியில் பங்கேற்றுள்ள மலையக சிறுமி அசானி தொடர்பான பதிவுகளே தற்போது சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளன.

அவர் பாடும் காட்சி, அவருக்கான ஆதரவு குரல், ஆசிர்வாதம், வாழ்த்துகள் என வலைத்தளங்களெங்கும் பதிவுகள் காணப்படுகின்றன.

தமது அடையாளமாக அசானியை மலையக சமூகம் கொண்டாடிவருகின்றது, அவர் இந்நிகழ்வில் பங்கேற்றிருப்பதால், மலையகத்தின் குரல் சர்வதேசம்வரை செல்லும் என மகிழ்வுடன் காணப்படுகின்றனர்.

இன்னும் இரு வாரங்கள் அசானி பாடவுள்ளார், திறமையை வெளிப்படுத்தி நிச்சயம் அவர் அடுத்தக்கட்டம் செல்வார், அவருக்கான ஆதரவை அனைவரும் தொடர்ந்து வழங்குவோம்.

அசானியை இந்த பிரமாண்ட களம்வரை கொண்டுவருவதற்காக பாடுபட்ட அத்தனை நல்லுள்ளங்களுக்கும், பேராதரவு வழங்கும் மக்களுக்கும் நன்றிகள்.

Related Articles

Latest Articles