இலங்கைக்கு மலையக மக்கள் வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதையிட்டு லண்டனில் இன்று (18) அந்நாட்டு நேரப்படி பி.ப. 2.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும்.
பிரித்தானியவை தலைமையகமாகக் கொண்டியங்கும் ‘Solidarity for Malayagam’ அமைப்பு மற்றும் பிரிட்டிஷ் மலையக மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வெம்பிளியில் SUDBURY METHODIST CHURCH HALL மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறும்.
சிறப்பு மாநாடு, ஆய்வரங்கம், ஓவியக் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகளும், சமூக ஒன்றுகூடலும், ‘கறுப்பு வாரம்’ என்ற தொனிபொருளில் கருத்தரங்கமும் இராப்போஷனமும் இதன்போது நடைபெறும்.
இலங்கையிலிருந்து மும்மொழிகளினதும் இலக்கியப் பேச்சாளர் எழுத்தாளர் என்ற ரீதியில் மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உபதலைவர் சதீஷ்குமார் சிவலிங்கம், லண்டன் குரொய்டன் நகரத்தின் துணை மேயர் அ.தாமோதரன், பாரிஸ்டர் பத்ரிநாத் பாலவெங்கடேசன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர். The Life Of Upcountry Tamils Of Plantation In Sri Lanka 200 Years என்ற ஓவியக் கண்காட்சியில் வைக்கப்படும் படைப்புகளின் ஏலம் மூலமாக கிடைக்கப் பெறும் நிதி, மாணவர்களின் உயர் கல்விக்கான புலமை நிதியத்துக்கு வழங்கப்படவுள்ளதாக, நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்
