” மலையக ஆசிரியர் உதவியாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.அவர்களின் உரிமை மீறப்பட்டுள்ளது.
ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகளைஏற்று , அவர்கள் தகைமையை பூர்த்திசெய்துள்ளனர். எனவே, இனியும் தாமதிக்காது அவர்களுக்கான ஆசிரியர் நியமனத்தை வழங்குமாறு கோருகின்றேன்.
தனியார் கம்பனிகளில் நிரந்தர நியமனத்தில் இருந்தவர்கள்கூட பதவி விலகிவிட்டுவந்து ஆசிரியர் சேவையில் இணைந்தனர். தற்போது இரண்டும் இல்லை என்ற நிலையில், அவர்கள் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் கூறினார்.
மலையக ஆசிரியர் உதவியாளர்களை, ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குமாறு வலியுறுத்தும் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதம் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டார்.