மலையக எழுச்சி பயணம் 3 ஆவது நாளாகவும் வெற்றிகரமாக முன்னெடுப்பு!

தலைமன்னாரிலிருந்து, மாத்தளை வரையான ‘மலையக மக்களின் ‘எழுச்சி’ பயணம் இன்று மூன்றாவது நாளாகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

தலைமன்னாரில் இன்று காலை 5 மணிக்கு ஆரம்பமான பாத யாத்திரை முருங்கன்வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

மலையக தமிழர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்படவேண்டும், காணி உரிமை அவசியம், பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்பன உட்பட 10 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து ‘மலையக எழுச்சி பயணம்’ நேற்று ஆரம்பமானது.

குறித்த பாத யாத்திரை ஆகஸ்ட்12 ஆம் திகதி மாத்தளையை வந்தடையவுள்ளது.

இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம், சிவில் அமைப்புகள் மற்றும் மலையக சமூகம்சார் செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய  “மாண்புமிகு மலையக மக்கள்” கூட்டிணைவினால் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 28 ஆம் திகதி அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது. 29 ஆம் திகதி முதல்தான் பாத யாத்திரை இடம்பெற்றுவருகின்றது.

Related Articles

Latest Articles