நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரின் தொலைப்பேசி உரையாடல்கள் தொடர்பான தகவல்களை பொரளை பொலிஸில் ஒப்படைக்குமாறு, சேவை வழங்குனர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், ரிஷாட் பதியுதினின் வீட்டில் வேலைசெய்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயது சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த இடைத்தரகரின் தொலைப்பேசி உரையாடல் மற்றும் வங்கிக் கணக்கு தகவல்களையும் ஒப்படைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.
ரிஷாட் பதியுதீனின் வீட்டுக்கு 2020 ஒக்டோபர் மாதம் வேலைக்கு அமர்த்தப்பட்ட டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமியொருவர் கடந்த மூன்றாம் திகதி தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைபெற்று வந்த நிலையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.