பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது 70ஆவது பிறந்த நாளை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடிவருகின்றார்.
இந்நிலையில் அவருக்கு இலங்கை ஜனாதிபதி, பிரதமர் உட்பட உலக நாட்டு தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்துகூறி வருகின்றனர்.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின்கீழ் இலங்கையில்வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு மேலதிகமாக 10 ஆயிரம் வீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்துடன் பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளை மேம்படுத்துவதற்கும் உதவிகள் வழங்கப்பட்டன.
அதேபோல் மலையகத்துக்கு பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு பிரதமர்களில் மோடி முதன்மையானர்.
கிளங்கன் வைத்தியசாலை திறப்பு விழாவுக்கு வருகைதந்தபோது நோர்வூட் மைதானத்தில் மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். இதன்போதே 10 ஆயிரம் வீடுகள் குறித்த அறிவிப்பை விடுத்தார்.