மலையக தியாகிகள் தினம் யாழ். பல்கலையில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு

மலையக தியாகிகளின் நினைவுதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பொதுத் தூபியில் இன்று (10) உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

ஈகைச் சுடரேற்றப்பட்டு, மலையக தியாகிகளுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களால் உரைகள் ஆற்றப்பட்டன.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles