மலையகத்தில் செயற்படும் பிரபலமான கலை அமைப்பான “மலையக நட்சத்திர கலைப் பேரவை” யின் வெள்ளி விழா விருது வழங்கும் நிகழ்வும், கலை நிகழ்வுகளும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புசல்லாவை, சரஸ்வதி தேசிய பாடசாலையில் முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
பேரவையின் தலைவர் மலையக வாசுதேவன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், கலைஞர்கள் கௌரவிப்பும் இடம்பெறவுள்ளது.