இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று மாலை கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் வதிவிடத்தில் நடைபெற்றது.
இ.தொ.காவின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நிதிச்செயலாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் எம்.பி., இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர்.
இதன்போது பெருந்தோட்ட பகுதிகளில் அமைக்கபடவிருக்கும் இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பாகவும், மலையகத்தில் கொட்டகலை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பல்கலைக்கழகம் தொடர்பாகவும் அப் பல்கலைகழகத்திற்கு இந்திய அரசின் ஒத்துழைப்பும் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு பெருந்தோட்ட பகுதிகளின் பல்வேறு அபிவிருத்திகள் தொடர்பாகவும் , இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மலையக பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றது. இவ்விடயம் தொடர்பாகவும் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
