கொழும்பு மற்றும் பதுளைக்கு இடையிலான புகையிரத சேவைகளும், இரவு நேர அஞ்சல் புகையிரத சேவைகளும் வழமைபோல இயங்கும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிக்கையிலே இந்த விடையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் நீரில் மூழ்கிய கண்டி புகையிரத நிலையத்தில் இருந்து புகையிரத பயணங்கள் வழமை போன்று இடம்பெறுவதாக ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.