மலையக பெருந்தோட்ட நகரங்களின் இயல்புநிலை ஸ்தம்பிதம்

நாட்டில் நேற்று மாலை 06 மணி முதல் நாளை 4 ஆம் திகதி காலை 6 மணிவரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மலையக பெருந்தோட்ட நகரங்களின் இயல்புநிலை ஸ்தம்பிதமடைந்தது.

நகரையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஊரடங்கை மீறி செயற்பட முற்பட்ட சிலர், பொலிஸாரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு திருப்பியனுப்பட்டனர்.

மலையக நகர் பகுதி இவ்வாறு முடக்கப்பட்டிருந்தாலும் தோட்டப்பகுதிகளில் இயல்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தொழிலாளர்கள் வேலைக்குச்சென்றமை குறிப்பிடதக்கது.

Related Articles

Latest Articles