மலையக மக்களை அரசாங்கமும், கம்பனிகளும் நாடகமாடி பச்சை பச்சையாக ஏமாற்றியுள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.
” வீடும் இல்லை வீதியும் இல்லை. நாட்டில் தொழில் அமைச்சர் இல்லை. நிதி அமைச்சர் இல்லை. என்ன அரசாங்கம்நடத்திக்கொண்டு இருக்கிறீர்கள்? இது அரசாங்கமா? எனவும் ஆக்கிரோசமாக உரையாற்றினார்.
இதன்போது பாராளுமன்றத்துக்குப் பொருத்தமற்ற வசனங்களை சபையில் பேச வேண்டாமென சபைக்கு தலைமைத்தாங்கிக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்சுரேன் ராகவன் அறிவுறுத்தினார்.
” நாட்டில் பொருளாதார நெருக்கடி ஒன்று ஏற்பட்டுள்ளது. ஆனால், பதுளை மாவட்டக்குழு கூட்டத்தில் பதுளையில்எங்கு இராணுவ முகாம் அமைக்கலாம் என்பது தொடர்பில் பேசப்படுகிறது. மலையக மக்களின் சாபத்துக்கே தற்போதையஅரசாங்கம் முகங்கொடுத்து வருகிறது.” – என்றார் வடிவேல் சுரேஷ்.