” மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அம்மக்களுக்காக தீர்க்கமான தருணத்தில் அரசுக்கு உரிய அழுத்தத்தை பிரியோகிக்ககூட நான் தயாராகவே இருக்கின்றேன்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நான் 20 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்கின்றேன். பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் என்ன நடந்துள்ளது என மனசாட்சியிடம் கேட்க வேண்டும். மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்து பேசிக்கொண்டு மட்டும் இருக்க முடியாது.
வடக்கு, கிழக்கு எம்.பிக்கள், அம்மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒன்றிணைந்து செயற்படுகின்றனர். எனவே, மலையக எம்.பிக்களும் பிரச்சினைகளை தீர்க்க ஒன்றுபட வேண்டும். அதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன். அவ்வாறு இல்லாவிட்டால் அடுத்த 200 வருடங்களிலும் மலையகத்தில் மாற்றம் வராது.
பெருந்தோட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். அதற்காக மலையக எம்.பிக்கள் ஒன்றிணைய வேண்டும் என மீண்டும் அழைப்பு விடுக்கின்றேன். கூட்டணி ஒன்றை அமைக்கவும், அதில் நானும் பத்து பதினைந்து பேருடன் வந்து இணைவதற்கு தயார்.
( கூட்டணி அமைப்பதற்கான யோசனையை அவர், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரிடம் முன்வைத்தார்.)
