மலையக மக்களுக்கான உரிமைகளைக்கோரி ஹட்டனில் கையெழுத்து வேட்டை…!

தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக பெருந்தோட்ட மக்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஹட்டனில் நகரில் இன்று (23) ஆரம்பமானது.

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பியின் பெருந்தோட்ட தொழிற்சங்க கிளையான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தால் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

” மலையக மக்கள் இந்நாட்டுக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ளன, எனினும், அவர்களின் பொருளாதார மேம்பாடு, வாழ்வாதார மேம்பாடு, உரிமைகள் தொடர்பில் எந்தவொரு அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக மக்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குமாறு வலியுறுத்தியே கையெழுத்து திரட்டப்படுகின்றது.” – என்று ஏற்பாட்டுக்குழு அறிவித்தது.

அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ், செயலாளர் டி.எம். பிரேமந்திர, உப செயலாளர் கலைச்செல்வி உள்ளிட்டோரின் பங்கேற்புடன் கையெழுத்து வேட்டை ஆரம்பமானது.

இதன்போது கருத்து வெளியிட்ட சங்கத்தின் செயலாளர் கூறியவை வருமாறு,

” தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள போதிலும் காணிப் பிரச்சினை, வீட்டு பிரச்சினை, கல்வி, சுகாதாரப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படவில்லை.

மாறாக தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பனவும் கொள்ளையடிக்கப்படுகின்றன.இதற்கு இடமளிக்க முடியாது. மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க எமது சங்கம் முன்னின்று செயற்படும்.” – என்றார்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles