‘மலையக மக்களுக்கு உணவு பொருட்கள் அனுப்ப தயாராகும் தமிழக முதல்வர்’

வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட இலங்கையில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை அனுப்பி வைக்க தமிழக அரசு தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை நேற்று தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பேசும் போதே தமிழக முதல்வர் இதனை கூறியுள்ளார்.

அயல் நாடான இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், அங்குள்ள தமிழர்களுக்கு உதவிகளை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கு,கிழக்கு, கொழும்பு மற்றும் மலையகத்தில் உள்ள தமிழர்களின் நலன்களுக்காக தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து கப்பல் மூலம் அரிசி, தானியங்கள், மருந்து போன்றவற்றை அனுப்பி வைக்க தமிழக அரசு தயாராக இருப்பதாக மு.க.ஸ்டாலின், இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனுப்பி வைக்கும் பொருட்களை கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகங்கள் ஊடாக விநியோகிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக தமிழக முதல்வர் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles