மலையக மக்கள் மத்தியில் எங்களுக்கே பேராதரவு!

வரலாற்றில் முதன்முறையாக வடக்கு மக்கள் ஆட்சி அமைப்பதற்காக தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள். மலையக மக்களும் எமக்கு நேசக்கரம் நீட்டினார்கள். தேர்தல் காலத்தைவிடவும் தற்போது மலையக மக்கள் மத்தியில் எமக்கு பேராதரவு உள்ளது என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜனநாயகத்தை மதித்தே செயல்படுகின்றது. அரசியல் எதிராளிகளை நாம் ஒடுக்கவில்லை. ஆனால் களவாடியவர்கள் நிச்சயம் சிறைச்சாலைக்கு செல்ல நேரிடும். ஊழல், மோசடிகளைத் தடுக்கவும், குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு சட்ட ரீதியாக தண்டனைப் பெற்றுக்கொடுக்கவுமே மக்கள் எமக்கு ஆணை வழங்கினார்கள்.” எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles