மலையக மக்கள் மாசற்ற சூழலில் வாழும் உரிமை உறுதிசெய்யப்படவேண்டும் என்று அனுஷா சந்திரசேகரன் அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.
நுவரெலியா ஒலிபண்ட் மேல் பிரிவு மக்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
கடந்த பொதுத்தேர்தலில் அனுஷா சந்திரசேகரனுக்கு வாக்களித்த நுவரெலியா மாவட்ட ஒலிபண்ட் மேல் பிரிவு மக்களுக்குநன்றி தெரிவிக்கும் முகமாக மேற்படி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது பிரதேச மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் மேற்கொள்ளக்கூடிய எளிய தீர்வுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட எல்லையில் வசித்தாலும் இப் பிரதேச மக்களது அன்றாட திண்ம கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படாமையினால் ஏற்படும் சூழல் சார்ந்த பிரச்சினைகளும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
மேலும், எம் உறவுகள் இப்பிரதேசத்திலிருந்து கடந்த காலங்களில் பல பாராளுமன்ற உறுப்பினர்களையும் பல பிரதேச சபை உறுப்பினர்களையும் உருவாக்கியிருந்தாலும் கூட இவர்களது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாமை வேதனைக்குரிய விடயமாகும்.
எதிர்வரும் காலங்களில் பிரதேச சபைகளுக்கு மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களை தெரிவு செய்வதன் மூலம் இந்நிலைமை மாற்றப்பட வேண்டும் எனவும் அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.