இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்குமிடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை மாலை நடைபெறவுள்ளது.
இந்த தகவலை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உறுதியளித்துள்ளார்.

இந்தியாவின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியும், மலையக மக்களுக்காக இந்தியாவால் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
