அவிசாவளை பகுதியில் ஹோட்டல் அறையொன்றுக்குள் 23 வயது யுவதியொருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவருடன் சென்றிருந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்கும் இடையில் நேற்றிரவு கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
தான் உறக்கத்தில் இருந்து எழுந்து பார்த்தபோது, யுவதி சுயநினைவின்றி காணப்பட்டுள்ளார் என குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.
குறித்த இளைஞனின் வாக்குமூலத்தில் முரண்பாடு இருப்பதால் சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது கொலையா அல்லது தற்கொலையா என்பது பற்றி இன்னும் தெரியவரவில்லை. விசாரணைகள் தொடர்கின்றன.
நுவரெலியா, வலப்பனை பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த யுவதி கந்தப்பளை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவருகின்றது.