“ காணி உரிமையை பாதுகாக்க ஹட்டன் நகரில் நாளை அணி திரள்வோம்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
“ லயன் அறைகளை ஒன்று திரட்டி, கிராமமாக்கி தருகிறோம் என்கிறது அரசாங்கம். தனி வீடுகளை அமைத்து, புதிய கிராமங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கையாகும்.
லயன் வாழ்க்கை முறையை ஒழிப்போம் என்பவர்கள், சொந்த நிலத்தில், தனி வீட்டில் வாழ்வோம் என்பவர்கள், அரசியல், தொழிற்சங்க வேறுபாடுகளுக்கு மாறாக, சமூக உரிமைக்காக ஒன்றிணைவோம்.
இன்றைய சந்ததியினரின் வாழ்க்கை, பெருந்தோட்டங்களில், லயன் அறைகளுக்குள் முடக்கப்பட்டுவிட்டது. நாளைய சந்ததியினரையும், எமது வளர்ந்து வரும் பிள்ளைகளையும், லயன் அறைக்குள் முடக்க சட்டமமைப்பதற்கு நாம் இடமளிப்பது சரியா?
அதனை தடுத்து நிறுத்துவோம்!!
எமது எதிர்ப்பை தெரிவிக்க தமிழ் முற்போக்கு கூட்டணியோடு கைகோர்த்து ஒன்றிணைவோம்!!”
– எனவும் வேலுகுமார் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.