இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகளுக்குமிடையிலான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், பெருந்தோட்ட மனிதள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள், சகல பெருந்தோட்ட யாக்கங்களின் நிறைவேற்று அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்
இதன்போது கடந்த காலங்களில் நிதியத்தினால் மேற்கொள்ளபட்ட செயற்பாடுகள் மற்றும் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கபடவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் மலையக வீடமைப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் அமைச்சினால் முன்னெடுக்கபடவுள்ள வீட்டுத்திடத்தில் வீட்டின் கூரைக்கு பதிலாக கொங்ரிட் சிலப் முறையிலான கூரை கொண்டு அமைப்பது தொடர்பாக இதன்போது இராஜாங்க அமைச்சர் விளக்கமளித்தார்.