ரி – 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்றைய தினம் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு போட்டி ஆரம்பமாகவிருந்தது.
எனினும், தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல், போட்டி கைவிடப்பட்டது.
இதன்படி, இரண்டு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டன.