மவுசாகலை நீர்த்தேக்கத்திற்கு அண்மித்ததாக அமைந்துள்ள காணித்துண்டொன்றையும், நீர்த் தேக்கத்தில் அமைந்துள்ள சிறிய தீவொன்றையும் நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் ஐக்கிய அரபு இராஜ்ஜிய கம்பனியொன்றுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் கெப்பிட்டல் இன்வெஸ்ட்மன்ட் எல்எல்சீ நிறுவனத்தால் முழுமையான நேரடி வெளிநாட்டு முதலீடாக 25 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்தி ஹோட்டல் கட்டிடத்தொகுதியை நிர்மாணித்து நடாத்திச் செல்கின்ற கருத்திட்டத்திற்காக, தற்போது இலங்கை மின்சார சபையின் பொறுப்பிலுள்ள மவு சாகலை நீர்த்தேக்கத்திற்கு அண்மித்ததாக அமைந்துள்ள காணித்துண்டொன்றும், நீர்த் தேக்கத்தில் அமைந்துள்ள சிறிய தீவொன்றையும் நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்காக கருத்திட்ட முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஏற்புடைய நிறுவனங்களின் உடன்பாடுகளைப் பெற்றுக்கொண்டு, முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக குறித்த கம்னிக்கு அக்காணித்துண்டை நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் வழங்குவதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.











