மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுசாகலை நீர்த்தேக்கத்துக்கு நீரேந்திச்செல்லும் மவுசாகல ஓயாவில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட எட்டு பேர் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
நோட்டன் , திபட்டன் தோட்டத்தை சேர்ந்த மூவரும், இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ஐவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, அவர் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். இதன்போது கைது இடம்பெற்றுள்ளதுடன், மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்










