மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று மதியம் திறக்கப்பட்டன.
நுவரெலியா மாவட்டத்தில் இன்று கடும் மழை பெய்துவருகின்றது. இந்நிலையிலேயே நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகளும் மூன்று அங்குலம்வரை திறக்கப்பட்டுள்ளன.
இதனால் தாழ் நிலப் பகுதியில் வாழும் அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்
