மவ்பிம ஜனதா கட்சியில் இணைந்தார் அருண் சித்தார்த்!

மவ்பிம ஜனதா கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளராக அருண் சித்தார்த் இன்று (22) நியமிக்கப்பட்டுள்ளார்.

மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தலைமையில் கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வின் போதே மவ்பிம ஜனதா கட்சியின் மாவட்ட பிரதான அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டார்.

அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியில் தாம் இணைந்துகொண்டபோதிலும், ஒடுக்குமுறைக்கு எதிரான தீர்வுகள் அந்தக் கட்சியில் கிடைக்காததால், மவ்பிம ஜனதா கட்சியில் இணைவதற்கு தீர்மானித்ததாக அருண் சித்தார்த் கூறினார்.

Related Articles

Latest Articles