மஸ்கெலியா, நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான தோட்ட முள்ளுகாமம் கீழ் பிரிவில் 13 தொழிலாளர்கள், இன்று முற்பகல் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
10 பெண் தொழிலாளர்களும், மூன்று ஆண் தொழிலாளர்களுமே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நால்வர் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். ஏனையோர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
மஸ்கெலியா நிருபர் – செதி பெருமாள்
