மஸ்கெலியா, புரவுன்சீக் தோட்ட புரவுன்சீக் பிரிவில் தேயிலை கொழுந்து கொய்து கொண்டிருந்த 40 தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று காலைவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 40 பெண்களில் 37 பேர்; சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பிய தாகவும் மூன்று பெண்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர். செ.தி பெருமாள்










