மஸ்கெலியா சுகாதார பிரிவில் 15 நாட்களில் 50 பேருக்கு கொரோனா!

கடந்த 15 தினங்களில் மஸ்கெலியா பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 50 பேர் covid-19 தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களும் 4 வயதுடைய சிறுவன் ஒருவரும் இருப்பதாகவும் பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் நரேந்திர குமார் தெரிவித்தார்.

அதேபோல் குறித்த பிரதேசத்தில் இதுவரை 6 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.

எனவே இவ்வாறான சூழ்நிலையில் மஸ்கெலியா பிரதேசத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு வினயமாக கேட்டுக் கொள்வதுடன் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும்போது சகலரும் சுகாதார முறைகளை நடந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கின்றார்.

ஏனெனில் மரணித்தவர்களுள் Covid 19 தடுப்பூசியை ,செலுத்தியவர்களும் இருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

முகக் கவசம் அணியாமல் முறையாக அணியாமல் சமூக இடைவெளிகளை பேனா மை சுய பாதுகாப்பு தொடர்பில் அலட்சியமாக இருக்கின்றமை போன்ற பல்வேறு விடயங்களை தொடர்ந்தும் பொதுமக்கள் செய்து வருவதன் காரணமாகவே இவ்வாறான இழப்புகளை சந்திக்க வேண்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நிலைமை கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் சில நகர்வுகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும் மக்கள் முழுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தமது கருமங்களில் ஈடுபட்டால் மாத்திரமே ஏற்படக்கூடிய பேரிழப்பை தவிர்த்துக்கொள்ள முடியும் என்றும் நரேந்திர குமார் மேலும் தெரிவித்தார்.

எஸ். கௌசல்யா

Related Articles

Latest Articles