நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான தோட்டம், எமில்டன் பிரிவை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மூவர் நேற்று (26) முதல் காணாமல் போயுள்ளனர் என நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
நடராஜா நிலூக்ஷன் – வயது 15, யோகராஜன் திவாகர் – வயது 13, ராஜா சன்தூர் – வயது 14 ஆகிய மாணவர்களே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.
இவர்கள் மூவரும் நீர் குழாய் ஒன்றை உடைத்து விட்டதால், வீட்டார் திட்டுவார்கள் என்ற அச்சத்தில் பாடசாலை சொல்வதாக கூறி நேற்று 26.10.2023 வீட்டை விட்டு வெளியேறி சென்று உள்ளனர்.
இவர்களை கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்துங்கள்.
மஸ்கெலியா நிருபர் – செதி பெருமாள்










