‘மஸ்கெலியா பஸ் தரிப்பிடத்தில் ஆபத்து’ – பயணிகள் விடுத்துள்ள அவசர கோரிக்கை

மஸ்கெலியாவில் பேருந்து தரிப்பிடத்திலுள்ள பொது மலசமலக்கூட கூரை பகுதியில் குளவிகள் கூடு கட்டியுள்ளதால்,  மக்கள் அச்சத்துக்கு மத்தியிலேயே மலசமலகூடத்தை பயன்படுத்திவருகின்றனர்.

மஸ்கெலியாவில் இருந்து சேவையில் ஈடுபடும் இ.போ.ச.மற்றும் தனியார் பஸ்கள் இங்குதான் தரித்துநிறுத்தப்படுகின்றன. எனவே, சாரதிகள், நடத்துனர்கள், பொதுமக்கள் என பலரும் குறித்த மலசலகூடத்தையே அவசர தேவையின் நிமித்தம் பயன்படுத்துகின்றனர்.

கடும்காற்றுவீசும்போது கூரைகள் ஆடுவதால் எந்நேரத்தில் வேண்டுமானாலும் குளவிக்கூடு கலைந்து, பயணிகளை கொட்டலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, குளவிகூடை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என கோரப்பட்டுள்ளது.

மஸ்கெலியா நிருபர் -பெருமாள்

Related Articles

Latest Articles