மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசாரணைக்குழு, நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் இன்று (7) இடைக்கால விசாரணை அறிக்கையொன்றை கையளித்தது.
மஹர சிறைச்சாலையில் கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற மோதலால் 11 கைதிகள் உயிரிழந்தனர். 108 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நீதி அமைச்சரால் மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தன தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது.
மாதத்துக்குள் முழுமையானதொரு அறிக்கையையும், ஒரு வாரத்துக்குள் இடைக்கால அறிக்கையொன்றையும் முன்வைக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இன்று அறிக்கை கையளிக்கப்பட்டது.
அதேவேளை, மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் சி.ஐ.டியினரும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
