மஹர சிறைச்சாலை மோதலின்போது சொத்துகளுக்கு சேதம்விளைவித்து வன்முறையில் ஈடுபட்ட 120 கைதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 116 கைதிகளுக்கும், சிறை தண்டனை அனுபவிக்கும் 4 வழக்கு தொடுக்கப்படவுள்ளது.
அதேவேளை, சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலால் 6 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்துள்ளன என்று சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார்.
மஹர சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் 11 கைதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.