மஹிந்தமீது கைவைத்தால் முழு நாடும் கொந்தளிக்குமாம்: தேரர் கொக்கரிப்பு!

மஹிந்த ராஜபக்சவுக்கு ஏதேனும் நடந்தால் முழு நாடும் கொந்தளிக்கும். பிறகு கோட்டாபய ராஜபக்ச சென்றதைவிடவும் மோசமாகவே தற்போதைய அரசுக்கும் செல்ல நேரிடும். எனவே, மஹிந்தமீது கைவைக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அக்மீமன தயாரத்ன தேரர்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியை வருமாறு,

“   முப்படை பலத்தை கொண்டிருந்த புலிகள்   அமைப்பை தோற்கடிக்கவே முடியாது என முழு உலகமும் சொன்னது.     ஆனால் மாவிலாறுவில் ஆரம்பமான போரை முள்ளிவாய்க்காலில் முடிவுக்குகொண்டுவந்த தலைவர்தான் மஹிந்த ராஜபக்ச.

எனவே, அதிகளவு பாதுகாப்பு உள்ள இடத்தில்தான் மஹிந்த ராஜபக்ச இருக்க வேண்டும்.  ஏனெனில் புலிகளின் நிழல் இன்னும் தொடரவே செய்கின்றது.  அதேபோல தடைவிதிக்கப்பட்டிருந்த     புலிகளுக்கு புத்துயிர் கொடுக்கக்கூடிய ஆறு டயஸ்போரா அமைப்புகள்மீதான தடை ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் நீக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்சவின் அரசியலை நாம் அனுமதிக்காதபோதிலும் போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர் என்ற வகையில்   அவரை பாதுகாக்க வேண்டும்.

மஹிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்கான வேலைத்திட்டம் நடக்கின்றதா என்ற சந்தேகம் எமக்கு உள்ளது. சந்திரிக்காவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மஹிந்தவை அகற்ற பார்க்கின்றனர்.
மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. அவரை வீட்டைவிட்டு வெளியேற்றி, அவருக்கு எதாவது நடந்தால்   அதற்கான பொறுப்பை ஜனாதிபதியும், அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும்.
அத்துடன், மஹிந்தவுக்கு ஏதேனும் நடந்து நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டால், கோட்டாபய ராஜபக்ச சென்றதைவிடவும் மோசமாகதான் செல்ல நேரிடும். வாக்களித்த ஆதரவாளர்களையும் தேடமுடியாமல்போகும்.” – என்றார்.
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles