மஹிந்தவின் கோட்டைக்குள் அமெரிக்க தூதுவர் களமிறங்கியது ஏன்?

இலங்கையில் ஆட்சி மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் யூஎஸ்ஏஐடி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் குற்றஞ்சாட்டிவரும் நிலையில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுஜி சங், மொட்டு கட்சி தலைமையகத்துக்கு நேற்று சென்றிருந்தார்.

தமது தலைமையகத்துக்கு வருகை தந்த தூதுவரை, கட்சி செயலாளர் சாகர காரியவசம் வரவேற்றார்.

இச்சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சாகர காரியவசம் கூறியவை வருமாறு,

‘எமது கட்சி தலைமையகத்துக்கு வருகை தந்திருந்த அமெரிக்க தூதுவர், எதிர்காலத்தில் ஏனைய கட்சி தலைமையகங்களுக்கும் செல்லவுள்ளார்.

யூஎஸ்ஏஐடி நிறுவனம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தூதுவரிடம் நாம் வினவி இருந்தோம்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நடைமுறைகள் தொடர்பில் மகிழ்ச்சியை வெளியிட்டோம். எமது கட்சியின் வாழ்த்துகளையும் தெரிவிக்குமாறு தூதுவரிடம் குறிப்பிட்டோம்.

யூஎஸ்ஏஐடி நிறுவனத்தின் நிதி பயன்பாடு தொடர்பில் தூதரகம் ஊடாக உள்ளக கணக்காய்வொன்று நடத்தப்படும் என தூதுவர் எம்மிடம் தெரிவித்தார்.

யூஎஸ்ஏஐடி நிறுவனம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் குறிப்பிட்டுள்ள விடயங்கள் பற்றியும் சுட்டிக்காட்டி இருந்தோம்.

அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக நேற்று( நேற்று முன்தினம்) நடைபெற்ற போராட்டத்தை எமது கட்சி ஏற்பாடு செய்யவில்லை. எனினும், எமது கட்சி உறுப்பினர்கள் சிலர் பங்கேற்றிருந்தனர்.” – என்றார்.

Related Articles

Latest Articles