நவம்பர் 18 ஆம் திகதி 77 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.இதனை முன்னிட்டு நாட்டிலுள்ள முக்கியமான சில ஜோதிடர்கள், மஹிந்தவின் ஜோதிடத்தை பார்த்துள்ளனர்.
அதில் ஒருவர், நவம்பர் மாதத்துக்கு பிறகு மஹிந்த ராஜபக்சவுக்கு ராஜயோகம் இருப்பதாக கணித்துள்ளார். இந்த தகவல் எப்படியோ ஆளுங்கட்சியினரின் காதுகளுக்கு செல்ல, அது தொடர்பில் பலகோணங்களில் கதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டனர். இது கிசு கிசு எழுதும் சமூகவலைத்தளங்களுக்கு சிறந்த தீணியாக அமைந்தது.
அதாவது மஹிந்தவுக்கு பிறந்தநாள் பரிசாக பிரதமர் பதவி காத்திருக்கின்றது என செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த நாடாளுமன்றத்தின் பதவிகாலம் முடியுவம்வரை அல்லது நாடாளுமன்றம் கலைக்கப்படும்வரை பிரதமர் பதவியில் தினேஷ் குணவர்தன நீடிப்பதையே மஹிந்த விரும்புகின்றார். மீண்டும் பிரதமர் பதவியை தற்போதைய சூழ்நிலையில் ஏற்பதற்கு அவர் தயாரில்லை என்பதே ‘லேட்டஸ்’ தகவல்.
