மஹிந்தவை பிரதமராக்கியது ஏன்? மைத்திரி விளக்கம்

பிரதமர் பதவியை ஏற்குமாறு விடுத்த அழைப்பை கருஜயசூரியவும், சஜித் பிரேமதாசவும் ஏற்க மறுத்தாலேயே மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டிய நிலை அன்று ஏற்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மஹிந்த ராஜபக்சவை நான் பிரதமர் ஆக்கியமை தொடர்பில் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாதுகாப்பு சபையைக் கூட்டுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நான் நிராகரித்தேன் எனவும் இங்கு உரையாற்றிய உறுப்பினர் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறு என்னிடம் கோரிக்கை விடுக்கப்படவில்லை. அந்த குற்றச்சாட்டை நிராகரிக்கின்றேன்.

மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்குவதற்கு முன்னர் கருஜயசூரியவிடம் நான்கு தடவைகள் பேச்சு நடத்தினேன். கொள்கை முரண்பாடு காரணமாக ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற முடியாது , எனவே, பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்தேன். ஆனால் அதனை அவர் ஏற்கவில்லை. அதன்பின்னர் சஜித் பிரேமதாசவுக்கும் பிரதமர் பதவியை ஏற்க அழைப்பு விடுத்தேன். அவரும் அதனை விரும்பவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த 2ஆம், 3ஆம் நிலையில் இருந்த தலைவர்கள் அழைப்பை ஏற்க மறுத்தால்தான் மஹிந்தவை நியமிக்க வேண்டி ஏற்பட்டது.” – என்றார் மைத்திரி.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles