மஹிந்தானந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்குள் கலந்துரையாடல் இடம்பெற்றுவருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

உரிய முகாமைத்துவ பொறிமுறையின்றி – மாற்று ஏற்பாடுகள் இன்றி அவசரமாக இரசாயன உரத்துக்கு தடை விதித்தமை, இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, பெருந்தோட்டத்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி உட்பட மேலும் பல விடயங்களை மையப்படுத்தியே இப்பிரேரணையை கொண்டுவருவதற்கு ஏற்பாடு இடம்பெற்றுவருகின்றது.

நம்பிக்கையில்லாப்பிரேரணையை தோற்கடிப்பதற்கான பலம் அரசாங்கம் வசம் இருந்தாலும், விவசாயிகளின் பிரச்சினைகளை பட்டியலிட்டும் காட்டும் நகர்வாகவே இப்பிரேரணை முன்வைக்கப்படும் என தெரியவருகின்றது.

வரவு – செலவுத் திட்ட கூட்டத்தொடர் ஆரம்பமாவதால், பிரேரணை கொண்டுவந்தால்கூட அதனை ஜனவரி மாதமளவிலேயே விவாதத்துக்கு எடுப்பதற்கு அரசாங்கம் உடன்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Related Articles

Latest Articles