மஹிந்த இலக்கு வைக்கப்படுவது ஏன்?

” புலி டயஸ்போராக்களின் வேண்டுகோளுக்கமையவே தற்போதைய அரசாங்கத்தால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மொட்டு கட்சி தலைமயகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

” முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய வரப்பிரசாதங்களை இரத்து செய்வதற்குரிய சட்டமூலத்தை முன்வைப்பதற்கு அரசாங்கம் தயாராகிவருகின்றது. இதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவியை வகிப்பவர்தான் நாட்டின் தலைவர். நாட்டுக்காக பல முடிவுகளை அவர் எடுக்க நேரிடும். தமது எதிர்காலம் குறித்து கருதாது நாட்டுக்காகவே முடிவுகளை எடுக்க நேரிடும். இவ்வாறு எடுக்கப்படும் முடிவுகளால் எதிர்காலத்தில் அவருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும். எனவேதான் உலக நாடுகளில்கூட தமது நாட்டின் முன்னாள் தலைவர்களுக்கு தேவையான வசதிகள் வழங்கப்பட்டுவருகின்றன.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், அரசியல் பழிவாங்கல் மற்றும் குரோத நோக்கு என்பவற்றின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய வரப்பிரசாதங்களை இல்லாது செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.

புலி டயஸ்போராக்களின் தேவைக்காக, அவர்களின் பழிவாங்கல் நடவடிக்கைக்காக இந்நாட்டில் போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர் இலக்கு வைக்கப்பட்டுள்ளார். எதிர்காலத்தில் போர் நிலை ஏற்பட்டால்கூட முதுகெலும்புடன் செயற்படக்கூடிய அரச தலைவர் ஒருவர் உருவாவதை தடுக்கும் நோக்கமும் இதன் பின்னணியில் உள்ளது.” – எனவும் மொட்டு கட்சி செயலாளர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles