மஹிந்த ஒருபோதும் திணறாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரான மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பி இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று வெளியிட்ட கருத்துகள் தொடர்பிலும் அவர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்கள், மஹிந்த ராஜபக்சவை நேசிப்பவர்கள். எனவே, போரை முடிவுக்கு கொண்டுவந்த மஹிந்தவை பாதுகாப்பதற்கு அனைவரும் அணிதிரள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
