சர்வஜன அதிகாரம் எனும் அரசியல் கூட்டணியின் முதலாவது மக்கள் கூட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தின்போது மேலும் சில தேசிய வாத அமைப்புகளும், கட்சிகளும் மேற்படி கூட்டணியுடன் இணையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சர்வஜன அதிகாரத்தின் நிலைப்பாடும் இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, தொழில் அதிபர் திலித் ஜயவீர உள்ளிட்டவர்கள் இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர். சிங்கள தேசிய வாத அமைப்புகளும் இணைந்துள்ளன.
கோட்டாபய ராஜபக்சவின் வியத்கமவில் இருந்த உறுப்பினர்களும் அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர்.
2015 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், மஹிந்தவின் எழுச்சி பயணம் நுகேகொடையில் இருந்தே ஆரம்பமானது. மஹிந்த சூறாவளி எனும் தொனிப்பொருளின்கீழ் முதலாவது மக்கள் கூட்டம் மஹிந்த தலைமையில் நுகோகொடையில் இருந்துதான் ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.