நுவரெலியா மாநகரசபையின் புதிய உறுப்பினராக முன்னாள் மாநகர முதல்வர் மஹிந்த தொடம்பே கமகே இன்று (10) வியாழக்கிழமை நுவரெலியா மாநகரசபை
ஆணையாளர் திருமதி சுஜிவ போதிமான முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துக்கொண்டார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் நுவரெலியா மாநகர சபை உறுப்பினராக இருந்த மோமட் பளீல் இராஜினாமா செய்ததையடுத்து அந்த வெற்றி இடத்திற்கு மஹிந்த தொடம்பே கமகே உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்துக்கொண்டார்.
நுவரெலியா மாநகரசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இவ்வைபவத்தில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழு தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ். பீ. திஸாநாயக்க, நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ். யோகராஜா, ஜெயராம் வினோஜ், விஸ்னுவர்தன் மற்றும் முன்னாள் நுவரெலியா மாநகர பிரதிமுதல்வர் கிருஸ்ணசாமி சந்திரசேகரன் உட்பட கட்சி ஆதரவாளர்களும் கலந்துக்கொண்டனர்.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு










