நாட்டில் அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடு இன்று காலை முதல் தளர்த்தப்பட்டாலும், மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பதில் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
அத்துடன், பயணத்தடை தளர்த்தப்பட்டாலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருப்பவர்கள் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடையும்வரை வெளியில் வரமுடியாது எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் செல்லுமாறும், சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுமாறும் சுகாதார தரப்பு பொதுமக்களிடம் கோர்க்கை விடுத்துள்ளது.










