மாகாணசபைத் தேர்தலை உறுதிப்படுத்தியது அரசாங்கம்!

2022 முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறுவதை அரசாங்கம் இன்று உறுதிப்படுத்தியது.

பழைய முறைமையிலேயே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் எனவும், இதற்கான சட்ட ஏற்பாடுகள் விரைவில் முன்வைக்கப்படும் எனவும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

சர்வதேச அழுத்தத்தாலேயே மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளியாகும் கருத்துகளையும் அவர் நிராகரித்தார்.

Related Articles

Latest Articles