மாகாணசபை முறைமையை நீக்குவது தொடர்பில் தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்துக்குள் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெவில்லை என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
” மாகாணசபை முறைமை நீக்கப்படவேண்டும் என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்துகின்றார். அதேபோல் இந்த முறைமையை நீக்குவதற்கு சூழ்ச்சி நடப்பதாக ஆளுங்கட்சிக்குள்ளேயே கருத்து வெளியிடப்படுகின்றது. அவ்வாறான ஏற்பாடு உள்ளதா, பேச்சு நடைபெறுகின்றதா” என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
” 19 மற்றும் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பிலேயே தற்போது கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.மாகாணசபை குறித்து பேச்சுநடத்தப்படவில்லை
அத்துடன், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைபலம் கிடைக்கும் என நான் நம்புகின்றேன். ’20’ என்பது தனி நபரை இலக்கு வைத்துக்கொண்டுவரப்பட்டது அல்ல. என்றும் குறிப்பிட்டார்.










