மாகாணசபை முறைமையை பலவீனப்படுத்துவதற்கு அமைச்சுகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றதா என்ற சந்தேகம் எழுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான வீதிகள் ஆர்.டீ.டீ.க்கு உட்பட்ட வீதிகளாகும். மேலும் சில வீதிகள் பிரதேச சபைக்கு உட்பட்டவையாகும். எனினும், நிதியை மத்திய அரசாங்கம் வைத்துள்ளது. மாகாண அரசுக்குகீழ் வரும் வீதிகளை அபிவிருத்தி செய்வதாக இருந்தால், நாம் மத்திய அரசிடம் கேட்க முடியாத சூழ்நிலையும் உள்ளது.
அத்துடன், மாகாணசபை முறைமையை பலவீனமாக்கும் செயற்பாடுகளை எல்லா அமைச்சுகளும் முன்னெடுப்பதுபோல்தான் தெரிகின்றது.
மாகாணசபைக்கு செய்ய முடியாததால் ஆர்.டீ.ஏக்கு கீழ் கொண்டுவந்து செய்ததாகக் கூறப்பட்டது. இது மாகாணசபை முறைமையை பலவீனப்படுத்தும் செயலாகவே உள்ளது. எனவே, மாகாணசபை முறைமையை பலவீனப்படுத்தாமல் ஆர்.டீ.ஏவால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்க முடியாமல் உள்ளது” – எனவும் சாணக்கியன் குறிப்பிட்டார்.