இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவுவரை மாகாணங்களுக்கிடையில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று கொரோனா ஒழிப்பு செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகும் எண்ணிக்கைக்கமைய சிலவேளை மாகாணங்களுக்குள்ளேயும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.