“விருப்பு முறைமை வாக்களிப்பாக இருந்த மாகாண சபை முறைமையை விகிதாசார முறைமையாக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டமையே தேர்தல் காலம் தாழ்த்திச் செல்லக் காரணமாகும்.”
– இவ்வாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவர் யாழ். ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பின்போதே இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்தச் சட்ட வரைமுறையால் எல்லை நிர்ணய வரையறைகள் சீர்திருத்தம் குறித்த பிரச்சினை இருக்கின்றது. இது தீர்க்கப்பட்டால் உடனடியாகத் தேர்தல் நடைபெறும். அதற்குத் திணைக்களம் தயாராக இருக்கின்றது. அல்லது குறித்த தீர்மானத்தைத் தற்போது நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையூடாக நிறைவேற்றி மீண்டும் பழைய முறைமையை நடைமுறைப்படுத்த நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றினால் பழைய முறைமையில் தேர்தலை நடத்த முடியும். அதற்கு ஏற்ற கால அவகாசமும் உள்ளது.” – என்றார்.கிச்சென்ற இபோச பஸ் சாரதியின் பொறுப்பற்ற செயல்….
பூண்டுலோயா, கம்பளை பிரதான வீதியானது அதிக வலைவுகளைக்கொண்ட வீதியாகும். பாரிய பள்ளங்களும் காணப்படுகின்றன. இவ்வீதியில் மிகவும் அவதானத்துடனேயே வாகனம் செலுத்திச் செல்ல வேண்டும்.
நிலைமை இவ்வாறிருக்க குறித்த சாரதி தொலைபேசியில் உரையாடியபடியே – தொலைபேசியை பார்த்தவாறு ஒற்றை கையால் பஸ்ஸை செலுத்தி சென்றுள்ளார்.
( நாட்டில் இடம்பெறும் விபத்துகளை கட்டுப்படுத்துவம், மக்கள் உயிரைக் காப்பதுமே எமது பிரதான நோக்கம். பொதுநலன் கருதியே இக்காணொளி பதிவிடப்படுகின்றது. சாரதிகளுக்கும் அவசர அழைப்புகள் வரலாம். அவர்களும் மனிதர்கள்தானே, அவ்வாறான சந்தர்ப்பங்களில் பாதுகாப்பான இடத்தில் பஸ்ஸை நிறுத்திவிட்டுகூட அவசர அழைப்புக்கு பதிலளிக்கலாம் அல்லவா?)